சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்றுடன் வந்த வாலிபரால் சிதம்பரம் ஸ்கேன் மையம் மூடல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சிதம்பரம் : கொரோனா தொற்றுடன் வாலிபர் .வந்து சென்ற ஸ்கேன் சென்டரை 3 நாட்கள் மூட சிதம்பரம் நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அங்கு வந்த 16 கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் புடையூரைச் சேர்ந்த 28 வயது வாலிபர் சென்னையில் இருந்து சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுத்து, தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் சிதம்பரம் எஸ்.பி. கோவில் தெருவில் உள்ள ஸ்கேன் மையத்தில், உடல் பரிசோதனை செய்துள்ளார். ஏற்கனவே அவருக்கு எடுத்திருந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, நேற்று காலை சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா தலைமையில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பலராமன், டாக்டர் மங்கையர்க்கரசி ஆகியோர் ஸ்கேன் மையத்தை பார்வையிட்டு, பணியில் இருந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். மூன்று நாட்கள் மையத்தை மூட வேண்டும். நோயாளிகளை அனுமதிக்கக் கூடாது. ஊழியர்கள் யாரும் ஸ்கேன் மையத்தில் இருக்க கூடாது என அறிவுறுத்தினர்.கொரோனா பாதித்த நபர் வந்ததற்கு பின் ஸ்கேன் சென்டருக்கு வந்திருந்த 16க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், நகராட்சி ஊழியர்கள் மையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X