இந்தியாவிடம் கருணை காட்டாத டிரம்ப்: முன்னாள் அதிகாரி பரபரப்பு தகவல்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Donald Trump, India, John Bolton, Trump, இந்தியா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், ஜான் போல்டன்,

வாஷிங்டன்; 'ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விஷயத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது கருணையே காட்டாமல் மிகவும் பிடிவாதமாக செயல்பட்டார்' என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறையின் முன்னாள் ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகராக இருந்தவர் ஜான் போல்டன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்தாண்டு இவரை, அந்த பதவியிலிருந்து நீக்கினார். இந்நிலையில், அதிகாரியாக பணியாற்றியபோது நடந்த நிகழ்வுகளை தொகுத்து, 'தி ரூம் வேர் இட் ஹேப்பண்ட்' என்ற தலைப்பில், ஜான் போல்டன் புத்தகமாக எழுதியுள்ளார்.


latest tamil news


அதில், இந்தியா தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது: 'மேற்காசிய நாடான ஈரானிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது. இதை மீறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே, ஈரானிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகவும், இதை நிறுத்தி விட்டு வேறு நாட்டிடம் வாங்கினால் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பரிசீலித்த அமெரிக்க அதிகாரிகள், இந்தியா தரப்பில் கூறப்பட்ட நியாயத்தை உணர்ந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப், பிடிவாதமாக இருந்தார். அவர், இந்தியா மீது கருணையுடன் செயல்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவுடன், டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, இந்தியா தரப்பின் நியாயத்தை போம்பியோ கூறினார். டிரம்ப், அதை பொருட்படுத்தவில்லை. 'ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காமல், மோடி சமாளித்துக் கொள்வார்' என, அலட்சியமாக கூறி விட்டார். இவ்வாறு, அதில் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
24-ஜூன்-202017:36:45 IST Report Abuse
Raj இவரைத்தான் மோடி தன் நண்பர் என்று கூறி ஏமாறுகிறார்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-ஜூன்-202015:05:23 IST Report Abuse
வெகுளி மோடியின் இந்தியா யாருடைய கருணையையும் எதிர்பார்க்கும் கையறு நிலையில் இல்லை.... அந்நிய கைக்கூலிகள் அலறுவது அதனால்தான்....
Rate this:
Cancel
Obama -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202012:59:34 IST Report Abuse
Obama We will buy oil, from anyone, as we like.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X