பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை குறைக்க இணைந்த மருத்துவ ஐ.ஏ.எஸ்.,கள்: தொற்றில் இருந்து மதுரையை மீட்பார்களா?

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
madurai, covid 19, coronavirus,  கொரோனா,  மருத்துவ_ஐ.ஏ.எஸ்., தொற்று, மதுரை,

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனாவை தோற்கடிக்க மருத்துவம் படித்த இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இணைந்துள்ளனர். இவர்கள் சரியான திட்டமிடலுடன் துயரத்தில் இருந்து மக்களை மீட்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பாதிப்பின் திடீர் வேகம் மதுரை மாவட்டத்தை பதைபதைக்க செய்துள்ளது. நான்கில் மூன்று பங்கு பாதிப்பு நகரில் தான் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாளில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேரை கொடிய வைரஸ் காவு வாங்கியுள்ளது.தற்போது மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரியை கொரோனா பொறுப்பு அலுவலராக மாநில அரசு நியமித்துஉள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் டாக்டர், மதுரை கலெக்டர் வினயும்டாக்டர். பொறுப்பேற்றதும்தனது பணியை சந்திரமோகன் துவங்கிவிட்டார். நேற்று கலெக்டர், மருத்துவஅதிகாரிகளுடன் அவர் நீண்ட நேரம் ஆலோசித்தார்.மதுரையில் கொரோனா வேகம் எடுத்தாலும்,கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் தான் உள்ளது. சென்னை போன்று நிலைமை கைமீறிப் போகவில்லை. மருத்துவம் படித்த இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் கொரோனாவின் ஆட்டத்தை அடக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.


கலக்கத்தில் சுகாதாரத்துறைகொரோனா போரில் களமாடும் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரையில் தொற்றின்வேகம் தீவிரமாகியுள்ளது. சென்னையை விட மதுரை கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அங்கு அரசு சார்பில் பெரிய, பெரிய வசதியுள்ள மருத்துவமனைகள் உள்ளன. இங்கு ஒன்று தான் உள்ளது. மதுரை மட்டுமின்றி பக்கத்தில் உள்ள 6 மாவட்டங்களும் இதைத்தான் நம்பியுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை சென்னை போன்று தினமும் ஆயிரம்,ஆயிரமாக அதிகரித்தால் என்ன செய்வது என தெரியாமல் கலங்கி போய் நிற்கிறோம். மக்கள் இனியும் அலட்சியம் காட்டினால் பேராபத்தில் முடியும், என்றார்.


latest tamil news
மதுரை சந்திக்கும் சவால்கள் என்னென்ன


* மதுரையில் கொரோனாவிற்காக ஒதுக்கப்பட்ட மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 650 படுக்கை வசதி உள்ளது. இதில் 150 படுக்கை ஐ.சி.யூ., வார்டில் உள்ளது. மொத்த பாதிப்பு 988 ஆக உயர்ந்திருக்கும் நிலையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை மட்டும் 574. இனி இம்மருத்துவமனை நோயாளிகளை தாங்காது.
* இப்போதே 250 படுக்கை உள்ள தோப்பூர் காச நோய் மருத்துவமனை கொரோனா வார்டிற்கு அறிகுறியின்றி பாதிக்கப்பட்ட நோயாளிகள் 127 பேர் மாற்றப்பட்டுள்ளனர். இதில் 94 ஆண்கள், 29 பெண்கள், 4 பேர் சிறுவர், சிறுமியர் உள்ளனர். சில நாட்களில் இங்கும் இடமிருக்காது.
* பழைய அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 250 படுக்கைகள் உள்ளன. இதுவும் நிரம்பினால் ரயில்வே, இ.எஸ்.ஐ., தாலுகா மருத்துவமனைகளில் நோயாளிகளை தங்க வைப்போம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் போக்கை பார்த்தால் இம்மருத்துவமனைகள் அனைத்தும் விரைவில் நிரம்பிவிடும் என தெரிகிறது. எனவே சென்னை போன்று தனியார் மண்டபங்கள், பள்ளி, கல்லுாரிகளில் நோயாளிகளை தனிமைப்படுத்தும் நிலை வரலாம்.
* முன்பு அறிகுறியுடன் பாதிக்கப்படுவோர் 15 சதவீதம் தான். இப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாளில் 24, 52, 60 என அறிகுறியுடன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு ஐ.சி.யூ., வார்டு தேவைப்படலாம்.
* ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் டாக்டர், நர்ஸ்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. நோயாளிகள் குவிந்தால் சமாளிக்கும் அளவு டாக்டர், நர்ஸ்கள் கிடையாது.
* கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல் மாற்றப்பட்டுள்ளதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும் இப்போதே குற்றச்சாட்டு எழுந்துவிட்டது. நோயாளிகள் குவிந்தால் உணவிற்கான தனித் திட்டம் தேவை.
* சென்னையில் பரிசோதனை கருவிகள் அதிகம் இருப்பதால் தினமும் 10 ஆயிரம் பேர் வரை சோதிக்கப்படுகின்றனர். ஆனால் இங்கு 1500 பேரை கூட தினமும் சோதிக்க வசதியில்லை. இப்படி பல்வேறு சவால்கள் முன் நிற்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஜூன்-202017:03:25 IST Report Abuse
skv srinivasankrishnaveni பொதுஜனம் என்ற மக்களும் ஒத்துமையா இருக்கவேண்டும் அதுதான் ரொம்பவேமுக்கியம் இஷ்டத்துக்கு சுத்தின்னேயிருந்தால் எப்போதும் முடிவுக்கேவராதுங்கோ
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-ஜூன்-202016:50:45 IST Report Abuse
J.Isaac எல்லாம் மக்கள் கையில் உள்ளது. முக்கியமாக செல்லூர், ஜெய்ஹிந்புரம், அவனியாபுரம் மக்கள் அடங்கமாட்டார்கள்.
Rate this:
Cancel
மனதில் உறுதி வேண்டும் - மதராஸ்:-),இந்தியா
24-ஜூன்-202013:58:12 IST Report Abuse
மனதில் உறுதி வேண்டும் அந்த மதுரை MP கதற கதறி பேட்டி கொடுத்த பொது இந்த அரசு அவரை கேலி செய்தது இன்று பலன் இப்படி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X