பொது செய்தி

தமிழ்நாடு

டிரைவர், கண்டக்டருக்கு தொற்று: 602 பேர் 'தனிமை'க்கு அறிவுரை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேலம்: அஸ்தம்பட்டி பணிமனை டிரைவர், கண்டக்டருக்கு கொரோனா உறுதியானதால், 602 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம், தர்மபுரி மண்டலம், அஸ்தம்பட்டி பணிமனையின், 42 வயது டிரைவர், 43 வயது கண்டக்டருக்கு, மல்லூரில் உள்ள அரசு முகாமில் நடத்திய பரிசோதனையில், கொரோனா உறுதியானது. நேற்று மாலை, இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால், பணிமனையில் பணிபுரியும் டிரைவர் - 217 பேர், கண்டக்டர், 232, மெக்கானிக் - 46, அலுவலக பிரிவு ஊழியர் - 8, பாதுகாவலர் - 4, உதவி பொறியாளர் - 4, கிளை மேலாளர் ஒருவரை, தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக சோதனை மேற்கொள்ளப்படும். மேலும், தேவைப்படின் பணிமனையை மூடவும், அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X