பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளி இல்லை; மிட்டாய் கடைக்கு 'சீல்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: சமூக இடைவெளி பின்பற்றப்படாததால், மொத்த வியாபார மிட்டாய் கடைக்கு, நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். ஆத்தூர் நகராட்சி கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் குழுவினர், ஓட்டல், மளிகை கடை ஆகிய இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என, ஆய்வு செய்தனர். அப்போது, காமராஜர் சாலை வளைவில் உள்ள அறிவழகன், 50, மிட்டாய் கடையில், அதிகளவில் மக்கள் கூட்டம் இருந்தது. கடைக்கு, நகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். ஆத்தூர், ராணிப்பேட்டை, புதுப்பேட்டை, உழவர் சந்தை, காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில், முகக் கவசம் அணியாமல் வந்த, 80 பேருக்கு, தலா, 100 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். அதேபோல், நரசிங்கபுரம் நகராட்சியில், கமிஷனர் சேகர் தலைமையில் அலுவலர்கள், முகக் கவசம் அணியாமல் வந்த, 150 பேருக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X