பொது செய்தி

தமிழ்நாடு

பனமரத்துப்பட்டியில் முழு ஊரடங்கு அமல்படுத்த மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: மூன்று பேருக்கு கொரோனா உறுதியானதால், பனமரத்துப்பட்டியில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். பனமரத்துப்பட்டி பேரூராட்சி, 14வது வார்டைச் சேர்ந்த, 28 வயதுடைய, 'ஏசி' மெக்கானிக்குக்கு, கடந்த, 21ல் தொற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், சென்ற இடங்கள், பழகிய நண்பர்கள் குறித்து, சுகாதாரத்துறையினர் விசாரிக்கின்றனர். அவரது தந்தை, உறவினருக்கு, நேற்று, தொற்று உறுதியானது. தந்தை, திருவள்ளுவர் சாலையில், காய்கறி கடை நடத்திவந்தார். அவரிடம், பலர் காய்கறி வாங்கினர். 14வது வார்டைச் சேர்ந்தவர்களை, வீட்டில் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால், சரக்கு வாகனத்தில், பலர் கட்டட பணிக்கு வழக்கம்போல் சென்று வருகின்றனர். மேலும், டாஸ்மாக், இறைச்சி, பாஸ்ட்புட், மளிகை கடைகள், காபி பார், வாரச்சந்தை ஆகிய இடங்களில், சமூக இடைவெளியின்றி, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், எளிதில் பலருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், முழு ஊரடங்கை அமல்படுத்த, மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X