பொது செய்தி

தமிழ்நாடு

'களப்பணியாளரை தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேலம்: ''சேலம் மாநகராட்சியில், கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ளும் களப்பணியாளரை, பணிபுரிய விடாமல் தடுத்தால், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கமிஷனர் சதீஷ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: சேலம் மாநகராட்சியில், தூய்மை பணியாளர், சுகாதார ஆய்வாளர், செவிலியர், மருத்துவ அலுவலர் உள்பட, 3,000க்கும் மேற்பட்ட களப்பணியாளர் ஈடுபட்டுள்ளனர். விழிப்புணர்வு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. மக்கள் கூடும் இடங்களில், தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. நான்கு மண்டலங்களில், மக்கள், மாநகராட்சி அலுவலர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைத்து, உரிய அனுமதியின்றி மாநகருக்குள் வருவோரை கண்டறிந்து, பரிசோதனை நடத்தப்படுகிறது. அடைக்கலம் கொடுத்தவர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரை, 27 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல், முகக் கவசம் அணியாமல், பொதுவெளியில் வந்தவர்களிடமிருந்து, 55.42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிபந்தனை, வழிகாட்டுதல்படி, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பு பணிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். களப்பணியாளர்களை பணிபுரிய விடாமல் தடுத்தாலோ, தடுப்பு பணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ, போலீஸ் மூலம் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X