தமிழ்நாடு

அரசு மருத்துவர் உள்பட 20 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், அரசு மருத்துவர், செவிலியர், கர்ப்பிணி உள்பட, 20 பேருக்கு, 'கொரோனா' தொற்று, நேற்று உறுதியானது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும், 45 வயது மயக்கவியல் மருத்துவர்; 31 வயது செவிலியர்; அறுவை சிகிச்சை அரங்க உதவியாளரான, அப்பமசமுத்திரத்தைச் சேர்ந்த, 27 வயது ஆண் மட்டுமின்றி, சத்து குறைபாட்டால் ரத்தம் ஏற்ற அனுமதிக்கப்பட்ட, கல்லாநத்தத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய, ஐந்து மாத கர்ப்பிணி ஆகியோருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

நகை கடை 'ஓனர்': கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், நைனார்பாளையத்தைச் சேர்ந்த, 32 வயது கொலுசு வியாபாரிக்கு, தொற்று ஏற்பட்டிருந்தது. அவர், சில நாளுக்கு முன், ஆத்தூர், கடைவீதியில் உள்ள நகை கடைக்கு கொலுசு விற்றார். இதில், அக்கடையின், 40 வயது உரிமையாளருக்கு, காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த, 21ல், நகராட்சி அதிகாரிகள், நகை கடையை மூடினர். அங்கு பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில், ராஜாஜி காலனியில் வசிக்கும், 40 வயது உரிமையாளர், கடை ஊழியரான, முல்லைவாடியைச் சேர்ந்த, 36 வயது பெண்; கோட்டை, 42 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது. அத்துடன், ஒடிசாவில் இருந்து வந்த, கம்பர்பெருமாள் கோவில் தெரு, 70 வயது முதியவர்; டில்லியில் இருந்து வந்த, முல்லைவாடி, 25 வயது ஆண்; வளையமாதேவியைச் சேர்ந்த, 30 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதியாகி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

லாரி டிரைவர்கள்: கர்நாடகாவில் இருந்து வந்த, வாழப்பாடி, தேக்கல்பட்டியைச் சேர்ந்த, 33 வயதுடைய லாரி டிரைவர், சந்திரபிள்ளைவலசு, 24 வயதுடைய லாரி டிரைவர்; அரியானாவில் இருந்து வந்த, சந்திரபிள்ளைவலசு, 26 வயது லாரி டிரைவர்; மத்திய பிரதேசத்தில் இருந்து வந்த, மன்னார்பாளையம், 40 வயது லாரி டிரைவர்; சென்னையில், இன்ஜினியராக பணிபுரியும், நடுப்பட்டியை சேர்ந்த, 34 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தை: தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உப்புஓடை புதூரில், சென்னையில் இருந்து வந்த, 26 வயது பெண்; திண்டிவனத்தில் இருந்து வந்த, 5 வயது பெண் குழந்தை; கோல்கட்டாவில் இருந்து வந்த, கெங்கவல்லி, நடுத்தெரு, 27 வயது லாரி டிரைவர் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தந்தை: பனமரத்துப்பட்டி, 14வது வார்டு, சின்னமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, 28 வயது, 'ஏசி' மெக்கானிக்குக்கு, கடந்த, 21ல், தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மேற்கொண்ட சோதனையில், அவரது, 52 வயது தந்தை, 38 வயது உறவினருக்கு தொற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஒரே நாளில், அரசு மருத்துவர், செவிலியர், கர்ப்பிணி உள்பட, 20 பேர், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: ஆத்தூர் சுகாதார மாவட்டம் சார்பில், நத்தக்கரை உள்பட எட்டு இடங்களில், சோதனை மையம் அமைத்து, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், கடந்த, 17ல், ஆறு பேர், 18ல், 10 பேர், 19ல் இருவர், 20ல், 10 பேர், 21ல், 12 பேர், 22ல் ஒருவர், 23ல், 20 பேர் என, இதுவரை, 123 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை, 10 ஆயிரத்து, 200 பேருக்கு பரிசோதனை செய்துள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்த சுகாதார மாவட்டத்தில், நரசிங்கபுரம் நகராட்சி தவிர்த்து, ஆத்தூர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில், தொற்று அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில், மேலும் தொற்று பரவாமல் இருக்க, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறையினர், நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது அவசியம்.

மருத்துவர், நோயாளிகள் கலக்கம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், 'கொரோனா' நோயாளிக்கு, 60 படுக்கைகள் உள்ளன. ஆனால், போதிய மருத்துவ சிகிச்சை இல்லாததால், தன்னார்வ அமைப்புகளிடம், மருத்துவர், செவிலியர், பணியாளருக்கு, பாதுகாப்பு உடை, உபகரணங்களை கேட்டு பெறுகின்றனர். தற்போது, 30க்கும் மேற்பட்டோர், 'கொரோனா' வார்டில் உள்ளனர். நேற்று, அங்கு பணிபுரிந்த மயக்கவியல் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளருக்கு தொற்று வந்ததால், அவருடன் தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர், செவிலியர், நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். அதனால், போதிய மருத்துவ உபகரணங்களை, அரசு மூலம் வழங்க வேண்டும். இல்லையெனில், தொற்று நோயாளிகளை, சேலத்துக்கு இடமாற்ற வேண்டும். மருத்துவ பணியாளருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், போதிய நோய் தடுப்பு பணி, தனிமைப்படுத்தல் பணி மேற்கொள்ளாததால் மருத்துவர், செவிலியர்கள், நோயாளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பிரசவித்த தாய்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், நாககுப்பத்தை சேர்ந்த, 30 வயது பெண், கடந்த, 21ல், பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தைக்கு, பரிசோதனை செய்ததில், தாய்க்கு தொற்று இருப்பது தெரிந்து, தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X