பொது செய்தி

தமிழ்நாடு

தாய், மகன் உள்பட 6 பேருக்கு தொற்று: புள்ளிபாளையம் மக்கள் அச்சம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சங்ககிரி: தாய், மகன் உள்பட, ஆறு பேருக்கு தொற்றால், புள்ளிபாளையம் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சங்ககிரி, மோரூர் கிழக்கு ஊராட்சி, புள்ளிபாளையத்தைச் சேர்ந்த, 52 வயது லாரி டிரைவர், விருதுநகர் மாவட்டத்துக்கு, சரக்கு கொண்டு சென்று வீடு திரும்பினார். அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால், பரிசோதித்ததில், கடந்த, 21ல் தொற்று உறுதியானது. சுகாதாரத்துறையினர், அவரது, 47 வயது மனைவி உள்பட, 18 பேருக்கு பரிசோதித்தனர். அதில், மனைவிக்கு தொற்று உறுதியானது. இதனால், சங்ககிரி மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் குழுவினர், நேற்று முன்தினம், 50 பேருக்கு சளி மாதிரி எடுத்து அனுப்பினர். அதில், தம்பதியுடன் பழகிய, அதே பகுதியைச் சேர்ந்த, 34 வயது தாய், 13 வயது மகன், 50 வயது பெண், 75 வயது மூதாட்டிக்கு தொற்று உறுதியானது. அனைவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குள்ள பால் பூத், மளிகை, டீக்கடைக்காரர்கள் என, 79 பேருக்கு நேற்று, சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரே பகுதியில், அடுத்தடுத்து, ஆறு பேருக்கு கொரோனாவால், சங்ககிரி ஆர்.டி.ஓ., அமிர்தலிங்கம் ஆய்வு செய்தார். ஊராட்சி சார்பில், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கூலிலைன் பகுதி 'தனிமை': மேட்டூர், கூலிலைன் பகுதியைச் சேர்ந்த, 52 வயதுடையவர், நகராட்சி பஸ் ஸ்டாண்டில், உறவினரின் கடையில் பொரி கடை வைத்திருந்தார். ஊரடங்கால், வீட்டில் இருந்த அவருக்கு, புற்றுநோய் இருந்ததால், ஒரு வாரத்துக்கு முன், கோவை மருத்துவமனைக்கு சென்றார். பின், வீடு திரும்பிய அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தொற்று உறுதியானதால், நேற்று, சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மாலை, கூலிலைன் பகுதியை, நகராட்சி நிர்வாகம் தனிமைப்படுத்தியது. அதேபோல், ராமன் நகரைச் சேர்ந்த, 39 வயது ராணுவ வீரர், ராஜஸ்தானில் இருந்து சமீபத்தில் சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகி, நங்கவள்ளி சுகாதார பணியாளர்கள், சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X