பொது செய்தி

தமிழ்நாடு

உணவுக்கே திண்டாடுவதால் உதவுங்கள்: பம்பை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேலம்: உணவுக்கே திண்டாடும் நிலை உள்ளதால், வங்கியில் வட்டியில்லா, 50 ஆயிரம் ரூபாய் கடனை வழங்க, பம்பை, உடுக்கை இசைக்கலைஞர்கள், அரசுக்கு முறையிட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட தமிழ்த்தாய் கிராமிய வெண்கல பம்பை இசைக்கலைஞர்கள் நலச்சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: கொரோனாவால், 4.5 மாதமாக, பம்பை கலைத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு கலை நிகழ்ச்சி கூட நடக்கவில்லை. இத்தொழில் தவிர, வேறு தொழில் தெரியாது. அதனால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, உணவுக்கு திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் நடக்கும் பண்டிகை, திருவிழா, கலை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருவாயால்தான், ஆண்டு முழுதும் சமாளித்து வந்தோம். தற்போது, வருமானம் அறவே இல்லை. அதனால், மாதம் தலா, 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கி அரசு உதவ வேண்டும். நலவாரியத்தில், புதிதாக இணைந்த உறுப்பினருக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும், வங்கி மூலம், வட்டியில்லா அல்லது மானியத்துடன், 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கி, மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். முன்னதாக, கோட்டை மைதானத்தில் இருந்து, இசை வாத்தியங்களை இசைத்தபடி, கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X