பொது செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு சமூகத்தால் எதிர்ப்பு: காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஆத்தூர்: வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த, இரு காதல் ஜோடிகளுக்கு, அவரவர் பெற்றோர் எதிர்ப்பால், திருமணம் செய்து கொண்டு போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
ஈரோடு, சித்தோட்டைச் சேர்ந்த, கலீன் மகள் மெஹருன்னிஷா, 23; எம்.எஸ்சி., படித்துவிட்டு வீட்டில் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த, ராஜா மகன் விக்னேஷ், 23; பி.இ., முடித்துள்ளார். இருவரும், பஸ்சில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு காதலித்தனர். வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால், இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன்தினம், வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, வாழப்பாடியில் உள்ள, விக்னேஷின் உறவினர் வீட்டுக்கு வந்தனர். நேற்று, திருமணம் செய்து கொண்டு, வாழப்பாடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும், போலீசார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பெண்ணின் பெற்றோர் வர மறுத்ததால், விக்னேஷூடன், பெண்ணை அனுப்பினர்.

மாயமான பெண்: ஆத்தூர், கோபாலபுரம், ஊராண்டிக்காட்டைச் சேர்ந்த, பழனி மகள் சுதா, 21; பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்துவிட்டு, வீட்டில் இருந்தார். கடந்த, 16ல், அவர் மாயமானதால், பெற்றோர், மல்லியக்கரை போலீசில் புகார் செய்தனர். 19ல், சேலம், வனவாசி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, மணி மகன் சின்னதுரை, 24, என்பவரை, காதல் திருமணம் செய்துள்ளார். நேற்று, மல்லியக்கரை போலீசில், சுதா, சின்னதுரையுடன், பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார். அப்போது, இரு ஆண்டாக காதலித்த நிலையில், வெவ்வேறு சமுதாயம் என்பதால் பெற்றோர் எதிர்த்ததால், திருமணம் செய்ததாக, போலீசில் கூறினார். இருதரப்பு பெற்றோரை அழைத்து, போலீசார் சமரசப்படுத்தி அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X