பொது செய்தி

தமிழ்நாடு

சுயதொழில் கடனுதவி ரூ.5 லட்சமாக உயர்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேலம்: சுயதொழில் கடனுதவி ஐந்து லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: வியாபாரம், சேவை சார்ந்த தொழிலுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே, ஐந்து லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் ஆண்டு வருமான உச்சவரம்பு, 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல், 35 வயது வரை இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு, அதிகபட்ச வயது, 45. வங்கி கடன் பெறும் பயனாளிக்கு, திட்ட மதிப்பீட்டில், 25 சதவீதம். அதிகபட்சம், 1.25 லட்சம் ரூபாய் வரை, தமிழக அரசு மானியம் வழங்கும். சுயதொழில் தொடங்க, www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில், இலவசமாக விண்ணப்பிக்கலாம். அத்துடன், கல்வி சான்று, ரேஷன் கார்டு, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை, ஜாதி சான்று ஆகியவை இணைத்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 'பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஐந்து ரோடு, சேலம் - 636 004' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகவலுக்கு, 0427 - 2448505, 2447878 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X