தாய் பலி; மகன் கவலைக்கிடம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய் பலி; மகன் கவலைக்கிடம்

Added : ஜூன் 24, 2020
Share
இடைப்பாடி: இடைப்பாடி, கொத்தாபாளையத்தைச் சேர்ந்த, கந்தசாமி மனைவி சின்னபிள்ளை, 70. இவரது மகன் ராஜா, 50. கந்தசாமி இறந்த நிலையில், மகனுடன் சின்னபிள்ளை வசித்து வந்தார். கடந்த வாரம், ராஜா, கூலி வேலைக்கு ஈரோடு சென்றார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சின்னபிள்ளை, தடுமாறி விழுந்துள்ளார். இதுகுறித்து, ராஜாவிடம் கூறி, ஊருக்கு வர அறிவுறுத்தினார். அதன்படி, நேற்று வந்த ராஜாவிடம்,

இடைப்பாடி: இடைப்பாடி, கொத்தாபாளையத்தைச் சேர்ந்த, கந்தசாமி மனைவி சின்னபிள்ளை, 70. இவரது மகன் ராஜா, 50. கந்தசாமி இறந்த நிலையில், மகனுடன் சின்னபிள்ளை வசித்து வந்தார். கடந்த வாரம், ராஜா, கூலி வேலைக்கு ஈரோடு சென்றார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சின்னபிள்ளை, தடுமாறி விழுந்துள்ளார். இதுகுறித்து, ராஜாவிடம் கூறி, ஊருக்கு வர அறிவுறுத்தினார். அதன்படி, நேற்று வந்த ராஜாவிடம், 'உடல்நிலை சரியில்லை. இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம்' என, சின்னபிள்ளை கூறியுள்ளார். பின், இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தனர். அருகில் உள்ள வீட்டினர், இருவரையும், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மதியம், 1:30 மணிக்கு சின்னபிள்ளை இறந்தார். ராஜா, கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இடைப்பாடி போலீசார் விசாரணையில், ராஜா குடிபோதையில் இருந்தது தெரிந்தது. அவர், தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X