பொது செய்தி

தமிழ்நாடு

சிப்காட் ஆலைகளில் கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை, கலெக்டர் கதிரவன், நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா தொற்றால், ஈரோடு மாநகராட்சி வளையக்கார வீதி, அகத்தியர் வீதியில், 51 வீடுகள், சம்பத் நகர், சித்தோடு, கொடுமுடி பகுதிகளில், 3,282 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு பஸ் ஸ்டாண்ட் காய்கறி கடை, அங்குள்ள ஆட்டோ டிரைவர் என, 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிப்காட்டில் உள்ள நிறுவனங்களில், முன்னெச்சரிக்கை ஆய்வு செய்யப்பட்டது. தொழிலாளர்களின் சுகாதார நலன் கருதி, ஹைப்போகுளோரைட் கரைசல், லைசால் கலந்து, சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், என்பதை தொடர்ந்து ஆய்வு செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X