பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மீது அவதூறு: எஸ்.பி.,யிடம் புகார்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: பா.ஜ., மற்றும் பிரதமர் மீது, முகநூலில் அவதூறு பரப்பும், காங்., மற்றும் தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சட்டப்பிரிவு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, எஸ்.பி., சக்தி கணேசனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கே.பி.முத்துகுமார், காங்., என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருக்கும், மொடக்குறிச்சி காங்., தலைவர் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் நபர், பா.ஜ., மற்றும் பிரதமர் குறித்து, பொய் செய்திகளை பார்வேர்டு செய்கிறார். ஆர்.எஸ்.எஸ்., பிரதமரை இணைத்து அநாகரீகமான போட்டோவை உருவாக்கி, பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, டுவிட்டர் கணக்கில் பகிர்ந்தது போல் போலியாக பதிவு செய்துள்ளார். இதேபோல் மகேந்திரன் பழனிச்சாமி என்ற பெயரில், முகநூல் கணக்கு வைத்திருக்கும் செ?ன்னிமலையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போட்டோவை வெளியிட்டு, அவதூறு செய்தியை பதிவு செய்துள்ளார். முகநூலில் பிரதமர் குறித்து, ஏற்கனவே தவறான தகவலை பரப்பியதால், போலீசாரின் நடவடிக்கைக்கு இவர் ஆளானார். ஆனாலும், சட்ட விரோத செயல்களை மாற்றி கொள்ளவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X