பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுவை மிரட்டும் மைக்ரோ பைனான்ஸ்: ஆலோசனை கூட்டத்தில் கண்டனம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில், கடன் பெற்று பாதிக்கப்பட்ட மகளிர் குழு பெண்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இ.கம்யூ., மாவட்ட பொருளாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஈரோடு மாநகரில், 50க்கும் மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற இயலாத, உழைத்து ஊதியம் ஈட்டி வாழ்க்கை நடத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மகளிர் குழுவினர், இவற்றில் கடன் பெறுகின்றனர். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பாதித்துள்ளனர். அரசும், ரிசர்வ் வங்கியும், மார்ச் முதல் ஆக., வரை ஆறு மாதங்களுக்கு, அனைத்து வகையான கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாறாக, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன் தவணை, வட்டியை செலுத்த வலியுறுத்தி, அபராத வட்டி செலுத்த நிர்பந்திக்கிறது. இதனால் மகளிர் குழுவினர், அவர்களின் குடும்பத்தார் பாதிக்கின்றனர். இச்செயல்பாட்டை நிறுத்துவதுடன், இந்நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். முன்னதாக வரும், 2ல் பாதிக்கப்பட்ட மகளிர் குழு மூலம், ஈரோடு கலெக்டரிடம் மனு வழங்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X