பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் பர்த்டே கொண்டாடிய தி.மு.க., நிர்வாகி: கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மொடக்குறிச்சி: ஊரடங்கு விதியை மீறி, பஸ் ஸ்டாண்டில் இரவில் பிறந்தநாள் கொண்டாடிய, கொடுமுடி தி.மு.க., நிர்வாகி உள்பட ஏழு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆபாச வார்த்தைகளை கோஷமிட்டு, இரவில் நடந்த கொண்டாட்ட வீடியோ, சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
கொடுமுடி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் ராஜாகமல் அசேன், 33; கொடுமுடி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர். தனது பிறந்தநாள் விழாவை, கடந்த, 14ம் தேதி இரவு, கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் எதிரே, 20க்கும் மேற்பட்ட நண்பர்களுடன், கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது ஆபாச வார்த்தைகளை கோஷமாக எழுப்பியதால், அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கொண்டாட்டத்தை, வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும், வாட்ஸ் ஆப்பில் பரவ விட்டனர். இதைப்பார்த்த கொடுமுடி போலீசார், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜா கமல் அசேனை முதல் குற்றவாளியாக சேர்த்து, அராபத், சதாம், மற்றொரு அராபத், ஹர்ஷத், கவுதம் ரியாஸ், ஆருண்பாபு என ஏழு பேர் மீது, வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் கொடுமுடி தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24-ஜூன்-202021:14:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan திமிரெடுத்த திமுகவினரை கைது செய்திருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X