பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா; திருநகர் காலனிக்கு 'சீல்'

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: மாவட்டத்தில் ஒரே நாளில், ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், திருநகர் காலனி பகுதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு மாநகரில் வளையக்கார வீதி, அகத்தியர் வீதி, வி.வி.சி.ஆர்., நகர், சம்பத் நகர், மாவட்டத்தில் கொடுமுடி, அம்மாபேட்டை பகுதிகளில், வெளியூரில் இருந்து வந்தவர்களால், வீடுகளை தனிமைப்படுத்தி, பேரிகார்டு வைத்து தடை ஏற்படுத்தினர். கடந்த சில நாட்களாக, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருவோர், தனிமைப்படுத்தப்படுகின்றனர். அவசியப்படுவோரை அரசு மருத்துவமனை அல்லது மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். இதன்படி, ஈரோடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனிக்கு, சென்னையில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதியாகி, அவரது குடும்பத்தார் மூவர் என, நால்வரையும், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பகுதி முற்றிலும் தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டன. வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையில் சத்தி பகுதியில் இருவருக்கும், மாநகராட்சி பகுதியில் இருவருக்கும், கோபியில் ஒருவர் என, ஐந்து பேருக்கு, நேற்று தொற்று உறுதியானது. இவர்களில் மூவர் வெளி மாவட்டம் சென்று வந்தவர்கள். மற்ற இருவருக்கு, மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X