பொது செய்தி

தமிழ்நாடு

'அல்வா' தந்த நிதி நிறுவன சொத்து பறிமுதல்: மோசடி வழக்கில் போலீசார் அதிரடி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: மோசடி வழக்கில், பெருந்துறை நிதி நிறுவனத்தின் சொத்துக்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு-2, போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு, கொங்கு பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் செயல்பட்டது. நிறுவன உரிமையாளர்கள், மக்களிடம் பல லட்சம் ரூபாய் முதலீடாக பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து, மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில், 2014 நவ.,28ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிறுவன உரிமையாளர்களான, துடுப்பதி, துலக்கபாளையம் பெரியசாமி, அவர் மனைவி ஆகியோரின் சொத்தை கைப்பற்ற, சமீபத்தில் அரசு தற்காலிக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, பெரியசாமிக்கு சொந்தமான, வில்லரசம்பட்டியில் உள்ள, 3,075 சதுர அடி நிலம், துடுப்பதியில் உள்ள, 11 ஏக்கர், 1,500 சதுர அடியிலான கட்டடம், 666 சதுர அடி நிலம், பெரியசாமியின் மனைவி மலர்கொடிக்கு சொந்தமான, பெருந்துறையில் உள்ள, 8,220 சதுர அடி நிலம், 1,600 சதுர அடி நிலம், மாவட்ட நிர்வாகம் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலத்தை நில உரிமையாளர் விற்க அனுமதி இல்லை. வேறு யாரேனும் வாங்கவோ, விற்கவோ பிற முறைகளில் அடையவோ கூடாது. மீறி அவ்வாறு செய்தால் செல்லாது; அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X