பொது செய்தி

தமிழ்நாடு

கொடிவேரியில் குளிக்க 100வது நாளாக தடை: ரூ.20 லட்சம் வருவாய் இழப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

கோபி: ஊரடங்கால் கொடிவேரியில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க, நேற்றுடன் நூறாவது நாளாக தடை நீடிக்கிறது. இதனால், 20 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. தடுப்பணையில் இருந்து அருவியாக கொட்டு தண்ணீரில் குளிக்கும் வசதி எளிமை என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக ஐந்து ரூபாய், பார்க்கிங் கட்டணமாக டூவீலருக்கு, 10 ரூபாய், காருக்கு, 20, பஸ் மற்றும் டூரிஸ்ட் வேன்களுக்கு, 50 ரூபாய், போட்டோ எடுக்க, கேமராவுக்கு, 20 ரூபாய், வீடியோ பதிவுக்கு, 250 ரூபாய் என, பொதுப்பணித்துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், மார்ச், 15ம் தேதி முதல், சுற்றுலா பயணிகள் தடுப்பணைக்குள் நுழையவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று, 100வது நாளாக தடை நீடித்தது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: கொடிவேரி அணை மூலம், நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் என ஆண்டுக்கு, 45 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். வழக்கமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை, பள்ளி கோடை விடுமுறை விடப்படும். இதனால் தடுப்பணையில் குளிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருந்தும். ஊரடங்கு உத்தரவால், நூறு நாட்களில், 20 லட்சம் ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X