பொது செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவரின் மனைவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: கொரோனாவுடன் சென்னையில் இருந்து பாலக்கோட்டுக்கு வந்த லாரி டிரைவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று பரவியதால், அவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர், 43 வயது வாலிபர். அவர், சென்னையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன், பாலக்கோடு திரும்பினார். தகவலின்படி, தர்மபுரி மாவட்ட மருத்துவத்துறையினர் நடத்திய பரிசோதனையில், அவருக்கு கொரோனா உறுதியானது. அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய, 34 வயது மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையினர் அவரை, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள, கொரோனா சிறப்பு மையத்தில் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தனர். நேற்று வெளியான முடிவில், அவரது கணவர் மூலம், அப்பெண்ணுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து அவர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தில், நேற்று அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X