பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று, 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக - கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ததால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன், வினாடிக்கு, 1,800 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள ஐவர்பாணி, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X