பொது செய்தி

தமிழ்நாடு

தீர்த்தமலையில் விழிப்புணர்வு முகாம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

அரூர்: தீர்த்தமலையில், கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அரூர் அடுத்த தீர்த்தமலையில், பொதுசுகாதாரத்துறை மற்றும் தீர்த்தமலை கனரா வங்கி சார்பில், நடந்த முகாமுக்கு, வங்கி கிளை மேலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். இதில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பொதுமக்கள் அனைவரும், கிருமி நாசினி அல்லது சோப்புகளை பயன்படுத்தி, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது, கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுஇடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், எச்சில் துப்பக்கூடாது என, தர்மபுரி மாவட்ட நலக்கல்வியாளர் ரங்கராஜ், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். முகாமில், கனரா வங்கி உதவி மேலாளர் ராம ஆஞ்சநேயர், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X