வைக்கோல் ஏற்றி வந்த டாரஸ் லாரி தீப்பிடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வைக்கோல் ஏற்றி வந்த டாரஸ் லாரி தீப்பிடிப்பு

Added : ஜூன் 24, 2020
Share

அரூர்: அரூர் அருகே, வைக்கோல் ஏற்றி வந்த டாரஸ் லாரியில் ஏற்பட்ட தீயை, தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். விருத்தாசலத்திலிருந்து, அரூர் அடுத்த கூக்கடப்பட்டிக்கு வைக்கோல் ஏற்றிய டாரஸ் லாரி, நேற்று பகல், 12:00 மணிக்கு வந்தது. அச்சல்வாடியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான லாரியை, தீர்த்தகிரி, 40, என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சாலையின் குறுக்கே மேலே சென்ற மின்கம்பி, வைக்கோல் மீது உரசியதில், தீப்பிடித்தது. மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிந்தது. தகவலின்படி சம்பவ இடம் வந்த அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள், இரண்டு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். இதில், வைக்கோல் எரிந்த நிலையில், அதிஷ்டவசமாக லாரிக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X