குடிநீர் வழங்கக்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வழங்கக்கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

Added : ஜூன் 24, 2020
Share

கிருஷ்ணகிரி: குடிநீர் கேட்டு, கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகர மக்களுக்கு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜகடை சாலையில், முனுசாமி தெரு, கால்வாய்மேடு, தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், நான்கு நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி, காலிக்குடங்களுடன் நேற்று காலை, 6:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் அவர்களிடம் சமாதானம் பேசி, உடனே குடிநீர் வழங்குவதாக கூறியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால், பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, நகராட்சி ஆணையாளர் சந்திராவிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: கடந்த இரண்டு நாட்களாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் சிக்கல் இருந்தது. இன்று(நேற்று) மாலைக்குள் குடிநீரை ஏற்றி வினியோகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டு விட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால், நகராட்சி சார்பில் கோடையிலும் மக்களுக்கு தவறாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எனவே, எங்காவது குடிநீர் பிரச்னை இருந்தால், புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X