சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீச்சல் கற்று கொடுத்தபோது தந்தை, மகள் நீரில் மூழ்கி பலி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: நீச்சல் கற்றுக்கொடுத்த போது, தந்தையும், மகளும் விவசாய தண்ணீர் ?சேமிப்பு தொட்டியில் மூழ்கி பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே, சிம்பலதொட்டியை சேர்ந்தவர் பிரசாந்த், 45. விவசாயி. இவரது, மகள் ஜெகதலா, 10, பேரிகையில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று நாட்களாக பிரசாந்த், தன் மகளுக்கு, விவசாயத்துக்கு தண்ணீரை சேமித்து வைக்கும், எட்டு அடி ஆழ, பெரிய தொட்டியில் நீச்சல் கற்றுக்கொடுத்து வந்தார். நேற்றும் வழக்கம்போல், தண்ணீர் தொட்டியில் மகளுக்கு நீச்சல் கற்றுத்தந்த போது, திடீரென மகள் நீரில் மூழ்கினார். மகள் மூழ்குவதை கண்ட அவர், அதிர்ச்சியடைந்து மகளை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரும் நீரில் மூழ்கியதில், இருவரும் பலியாகினர். இது குறித்து, பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X