பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் ஓடும் கழிவு நீர்: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: கெலமங்கலத்தில், சாலையின் குறுக்கே கழிவு நீர் செல்ல பாலம் அமைக்க வேண்டும் எனக்கூறி, பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கெலமங்கலத்தில் இருந்து, பாரந்தூர் செல்லும் சாலையில், மின்வாரிய அலுவலகம் எதிரே, சாலையின் குறுக்கே சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையின் குறுக்கே, பாலம் அமைத்து, கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கெலமங்கலம் டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை என, எந்த அரசு அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, கெலமங்கலம் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில், பா.ஜ., கட்சியினர், பாரந்தூர் சாலையில் திரண்டு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சாலையில் குறுக்கே பாலம் அமைத்து, கழிவு நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க, கோஷங்களை எழுப்பினர். இறுதியாக, கெலமங்கலம் டவுன் பஞ்., செயல் அலுவலர் உமாராணியிடம், பா.ஜ., சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் சந்துரு, விவசாய அணி மாவட்டத்தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். கெலமங்கலம் நகர தலைவர் பாலகிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X