பொது செய்தி

தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கமலா காலனியை சேர்ந்த, 33 வயது ஆசிரியருக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. அதனால், சூளகிரி நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சூளகிரியில், மேற்கொண்டு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவின்படி, பிரத்யேக வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், சூளகிரி பேரிகை சாலை, அண்ணா நகர், கமலா காலனி, பழைய கிருஷ்ணகிரி சாலை, கீழ் தெரு உட்பட அனைத்து பகுதிகளிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிக்குமார் முன்னிலையில், பிரத்யேக வாகனம் மூலம், நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பேரண்டப்பள்ளி பஞ்., உட்பட்ட பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டில், தீயணைப்பு வாகனம் மூலம், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.


* கிருஷ்ணகிரி, சீனிவாசா காலனியில் ஒருவருக்கு, கொரோனா தொற்று பரவியதால், அங்கு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய, கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி, நகராட்சி ஆணையாளர் சந்திரா, நகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு துறையினர், 45 பேரை கொண்டு, சீனிவாசா காலனி, ராசுவீதி, மோகன்ராவ் காலனி, டி.பி.லிங்க் ரோடு மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம், கிருமி நாசினி தெளித்தனர். தீயணைப்பு வீரர்கள் முழுக்கவச பாதுகாப்பு உடை அணிந்து இப்பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X