பொது செய்தி

தமிழ்நாடு

பல் டாக்டர் கிளினிக் சென்ற 23 பேர் 'தனிமை' படுத்தல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஓசூர்: தேன்கனிக்கோட்டை, பல் டாக்டர் கிளினிக் சென்று வந்த, 23 பேர் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய, பல் மருத்துவ பிரிவு, கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிப்புக்கு பின் மூடப்பட்டது. அதனால், பல் டாக்டரும் மருத்துவமனைக்கு பணிக்கு வரவில்லை. ஆனால், தேன்கனிக்கோட்டையில் உள்ள தன் கிளினிக்கை திறந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இம்மாதத்தில் கிளினிக் திறந்திருந்த, 11, 12, 13 ஆகிய மூன்று நாட்களில், சிகிச்சை பெற வந்தவர்கள் விபரங்களை, அதிகாரிகள் குழுவினர் சேகரித்தனர். அதில் மொத்தம், 23 பேர் சிகிச்சைக்கு வந்து சென்றது தெரிந்தது. இதனால், அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு, அவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல் டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள், சிகிச்சை பெற சென்றவர்கள், யாராக இருந்தாலும், தாமாக முன்வந்து, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவ அலுவலர் ராஜேசை, 81109 72235 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இல்லாவிட்டால், தனி தாசில்தார் சரவணனை, 97878 82616 என்ற எண்ணிலோ, தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை, 94981 01094 என்ற எண்ணிலோ, தேன்கனிக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனை, 94981 01101 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X