பொது செய்தி

தமிழ்நாடு

7 கி.மீ.,க்கு சாலை அமைத்த மலை கிராம மக்கள்: 75 ஆண்டு கால பிரச்னைக்கு தற்காலிக தீர்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

திருப்பத்தூர்: நெக்னா மலை கிராம மக்கள், 7 கி.மீ., தூரத்துக்கு தாங்களே மண் சாலை அமைத்து, 75 ஆண்டு கால பிரச்னைக்கு, தற்காலிக தீர்வு கண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை மலை கிராமம், கடல் மட்டத்திலிருந்து, 1,500 மீ., உயரத்தில் உள்ளது. இங்கு, 1,250 பேர் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. இங்கு, 75 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை, குடிநீர், மின்சாரம், சுகாதார வசதி இல்லை. கர்ப்பிணி, நோயாளிகளை, டோலி கட்டி தூக்கி, 7 கி.மீ., தூரம் கடந்து, வாணியம்பாடிக்கு செல்லும் நிலையே உள்ளது. அரசியல் கட்சியினர், தேர்தலுக்கு மட்டும் ஓட்டு கேட்பதோடு சரி; அதன் பிறகு எட்டிப்பார்ப்பதில்லை என்பது, மக்களின் ஆதங்கமாக உள்ளது. கொரோனா நிவாரணம் வழங்க, அமைச்சர் வீரமணி அதிகாரிகளுடன், கடந்த மாதம், 21ல் நெக்னாமலைக்கு நடந்து சென்றார். நிவாரணத்தை ஏற்க மறுத்த மக்கள், சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர். சாலை அமைக்க மத்திய வனத்துறை அனுமதி வழங்காததால், முதல்வரிடம் பேசி சாலை அமைக்க ஏற்பாடு செய்வதாக, அமைச்சர் உறுதி கூறியிருந்தார்.

இந்நிலையில் மக்களே, பணம் வசூலித்து, 7 கி.மீ.,க்கு மண் சாலையை, 30 நாளில் அமைத்துள்ளனர். மருத்துவ வசதிக்காக சாலை அமைப்பதால், ஊரக வளர்ச்சித்துறையும் அனுமதி தந்துள்ளது. அமைச்சர்கள் வீரமணி, நிலோபர் கபில், மண் சாலையை நேற்று திறந்து வைத்தனர். இதனால் வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டு, 75 ஆண்டு கால பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது. 'கொரோனா வந்ததால் தான், தற்காலிக மண் சாலை அமைக்க அனுமதி வழங்கினர். சாலை அமைக்க, 50 லட்சம் ரூபாய் செலவானது' என்று, நெக்னா மலைவாழ் மக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X