பொது செய்தி

தமிழ்நாடு

ஜீப் டிரைவருக்கு கொரோனா: ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: ஆரணி, ஆர்.டி.ஓ., டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜெட் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. நேற்று, ஆரணி அடுத்த, விளை கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 மாத குழந்தை, மூன்று சிறுவர்கள் உள்பட, ஏழு பேர் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர். அந்த கிராமத்துக்கு, சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளித்து, 'சீல்' வைத்தனர். ஆரணி, ஆர்.டி.ஓ., ஜீப் டிரைவருக்கு, நேற்று கொரோனா உறுதியானதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆரணி, ஆர்.டி.ஓ., அலுவலகம் மூடப்பட்டது. அலுவலக ஊழியர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை, திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,225 பேர் கொரோனா தொற்று பாதித்த நிலையில், நேற்று, 114 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை, 1,340 ஆக உயர்ந்துள்ளது. இதில், 25 பேர், சென்னை எக்மோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குணமடைந்து, 465 பேர் வீடு திரும்பிய நிலையில், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X