பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு அதிகாரிகள் பூட்டு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வேலூர்: வெளியே சுற்றுவதை தடுக்க, தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வீடுகளுக்கு, அதிகாரிகள் பூட்டு போட்டு வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்கள் வீடுகளை விட்டு வெளியே சுற்றுவதாக புகார்கள் சென்றன. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்படி, மாநகர சுகாதார அலுவலர் சித்தரசேனா தலைமையிலான ஊழியர்கள் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வீடுகளை கண்டறிந்து, அந்த வீடுகளை பூட்டி வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது: முதல் கட்டமாக, 100 வீடுகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கித்தர மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால், மற்றவர்களுக்கு கொரோனா பரவுவது தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X