பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் பலி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில், கொரோனாவுக்கு நேற்று மூன்று பேர் பலியான நிலையில், மேலும், 55 பேருக்கு தொற்று உறுதியானது.
சென்னையிலிருந்து வந்தவர்களை, அதிகாரிகள் தடுக்க தவறியதால், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில், கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட, காட்பாடி காந்திநகரை சேர்ந்த, 67, 88 வயது முதியவர்கள், மேற்கு வங்காளத்தை சேர்ந்த, 57 வயது ஆண் என மூவர், நேற்று பலியாகினர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை, 14 ஆனது. வேலூரில், 37, 40, 48 வயது அரசு பஸ் கண்டக்டர்கள், கலெக்டர் அலுவலகம் எதிரில் அரசு குடியிருப்பில் வசிக்கும், 12 வயது சிறுமி, 41, 51 வயது ஆண்கள், சி.எம்.சி., மருத்துவமனையில், 57 வயது கண்காணிப்பாளர் மற்றும் பென்னாத்தூர், சைதாப்பேட்டை, கொசப்பேட்டை, குடியாத்தம், தொரப்பாடி, லத்தேரி என, நேற்று ஒரே நாளில், 55 பேருக்கு கொரோனா உறுதியானது. அனைவரும், வேலூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை, 678 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா பாதித்தோர் மற்றும் சென்னையிலிருந்து வந்தவர்களை கண்டறிய, சிறப்பு கிராமக் குழுக்களை அமைக்க, சிறப்பு அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X