சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய வியாபாரிகள் சுட்டதில் ஒருவர் படுகாயம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் அருகே, சாராய வியாபாரிகள் சுட்டதில் ஒருவர் படுகாயமடைந்தார். வேலூர் அருகே, சோழவரம் அடுத்த பாறைமேடு வெள்ளக்கல் பகுதியில், பலர் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். அவர்கள், சாராய விற்பனைக்கு பயன்படுத்தி வந்த வழியை சோழவரம் மக்கள் அடைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், நேற்றிரவு, 8:00 மணிக்கு சோழவரத்துக்கு வந்து நாட்டுத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், பென்னாத்தூரை பகுதியை சேர்ந்த தங்கராஜ், 45, படுகாயமடைந்தார். துப்பாக்கி சூட்டில், 10 வீடுகள் சேதமடைந்தன. அப்பகுதி மக்கள் தங்கராஜை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வேலூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X