பொது செய்தி

தமிழ்நாடு

கர்ப்பிணி மகளுக்கு உதவச்சென்ற தாய் பலி: ஈரோட்டில் கொரோனா கொடூரத்தால் பீதி

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் கொரோனா பாதித்த கர்ப்பிணி மகளுக்கு உதவியாக, மருத்துவமனை சென்ற தாய்க்கு, தொற்று ஏற்பட்டு பரிதாபமாக இறந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், முதல் கொரோனா சுற்றில் பாதிக்கப்பட்ட, 70 பேரில், 69 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் மட்டும் இறந்தார். தற்போது இரண்டாவது சுற்றாக, கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில், 25க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு, வளையக்கார வீதியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர், 15 நாட்களுக்கு முன் சென்னைக்கு சென்று வந்தார். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருந்ததால், தொற்று ஏற்படவில்லை. ஆனால், 20 வயதான அவரது கர்ப்பிணி மனைவிக்கு, 10 நாட்களுக்கு முன் தொற்று உறுதியானது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதே வீதியில் அடுத்தடுத்த நாளில், மெஸ் நடத்தி வரும் பெண், கூலி தொழிலாளிக்கு தொற்று ஏற்பட்டது. கர்ப்பிணி மகளை கவனித்து கொள்ள, 38 வயதான அவரது தாயார் உடன் சென்றார். சிகிச்சைக்கு சென்ற இரு நாளில், 38 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் இறந்ததாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X