சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்மப்பொருள் வெடித்து தம்பி பலி; அண்ணன் தற்கொலை முயற்சியால் பரபரப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: மர்மப்பொருள் வெடித்து தம்பி இறந்த நிலையில், அண்ணன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம், பனமரத்துப்பட்டி அருகே, தும்பல்பட்டியை சேர்ந்தவர் விவசாயி மணி, 50; சாலையில் கிடந்த மர்ம எலக்ட்ரானிக் சாதனத்தை, வீட்டுக்கு எடுத்துச்சென்றார். 'ரேடியோ' போல் இருந்ததால், பாட வைக்க மின் இணைப்பு கொடுத்தபோது வெடித்தது. இதில் அவர் உடல் சிதறி பலியானார். வீட்டில் இருந்த மூவர் படுகாயம் அடைந்தனர். விசாரணை நடத்த, டி.எஸ்.பி., உமாசங்கர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடக்கிறது. மணியின் அண்ணன் செங்கோடன், 65, வீட்டருகே உள்ள மாட்டு கொட்டகையில், நேற்று காலை தூக்கிட்டு, தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தம்பி இறந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், அண்ணன் தற்கொலைக்கு முயன்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X