பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா'வுக்கு மூதாட்டி பலி: 20 பேருக்கு பரவிய பரிதாபம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சேலம்: சன்னியாசிகுண்டைச் சேர்ந்த மூதாட்டி, 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்பகுதியில், மேலும், 20 பேருக்கு தொற்று உறுதியாகி, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், சன்னியாசிகுண்டு, பாத்திமா நகரைச் சேர்ந்த, சையத்சாகீத் மனைவி ஆதிபா, 60. இவருக்கு, சில நாளாக, சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. கடந்த, 21 மதியம், 1:00 மணிக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மதியம், 2:50 மணிக்கு உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர், வெள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இறந்த மூதாட்டியால், அப்பகுதியில், 20 பேருக்கு தொற்று பரவி, அவர்களும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சன்னியாசிகுண்டு பகுதி, மீண்டும், தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள், நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த, 14ல், பொன்னம்மாபேட்டை, அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மனைவி கவிதா, 40, கொரோனா பாதிப்பால் இறந்தார். அவருடன் சேர்ந்து, சேலத்தில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2 ஆக உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X