பொது செய்தி

தமிழ்நாடு

தளர்வுகளை கடுமையாக்க தமிழக அரசு முடிவு?

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (25+ 5)
Share
Advertisement
EPS, Collectors Meeting, CoronaVirus, COVID-19, Tamil nadu, tamil nadu CM, முதல்வர், இபிஎஸ், கலெக்டர்கள், ஆலோசனை, கொரோனா, வைரஸ்

சென்னை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர், இ.பி.எஸ்., மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க, தளர்வுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுதும், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, வரும், 30ம் தேதி வரை, ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்களின் வாழ்வாதாரம் கருதி, நோய் பரவல் அதிகம் உள்ள, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், வாகன போக்குவரத்துக்கும், கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க, 19ம் தேதியில் இருந்து, வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இன்று (ஜூன் 24) முதல், 7 நாட்களுக்கு மதுரையிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட, பல மாவட்டங்களில், நோய் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. எனவே, அந்த மாவட்ட நிர்வாகங்களும், முழு ஊரடங்கு அறிவிக்கும்படி, அரசிடம் கோரியுள்ளன. இந்த சூழ்நிலையில், முதல்வர் இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தினார். . இக்கூட்டத்தில், தலைமை செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தளர்வுகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகளை மூடப்பட உள்ளன. மண்டலங்களுக்குள் பொது போக்குவரத்து முறையை ரத்து செய்து விட்டு, மாவட்டத்திற்குள்ளேயே பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டல வாரியாக பஸ்கள் இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (25+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendran Chinnasamy - Coimbatore,இந்தியா
25-ஜூன்-202014:33:30 IST Report Abuse
Rajendran Chinnasamy கோவை பேருந்துகளில் கூட்டம் கூட்டமாக மக்களை கூட்டி செல்லும் அரசு நிர்வாகம் முதலில் சரியாகட்டும் . மக்களும் அப்படித்தானே உள்ளார்கள். தினமலர் செய்தியால் சித்ரா முதல் காலப்பட்டி வரை செல்லும் ஆட்டோ ரிக்க்ஷக்களை சீஸ் செய்த டிரான்ஸ்போர்ட் துறை ஏன் அரசு பேருந்து மீது நடவடிக்கை எடுக்கவில்லை . இரு செய்தகளும் ஒரே நாளில் தான் தினமலர் பேப்பரில் வந்தது
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
24-ஜூன்-202019:04:47 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இங்கே ஒரு கழிவுகளை கேரளாவில் இருந்து கொண்டுவந்து கொட்டும் கூட்டம் திராவிடம் பற்றி கிண்டல் ...
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
24-ஜூன்-202018:35:18 IST Report Abuse
kumzi ஒட்டு பிச்சைக்காக தப்லீக்கை காப்பாற்றி கொரோனாவை பரவட்டுட்டு இப்போது பலம்பி என்ன பண்ண
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X