சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை: முதல்வர்

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டன.சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடைதிறந்ததாக இவர்கள்
சாத்தான்குளம், தூத்துக்குடி, கடையடைப்பு, வணிகர்கள், போராட்டம், thoothukudi, Father, son, custodial death, shops, tamil nadu, shopkeepers, protest

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டன.

சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(56). இவருடைய மகன் பென்னிக்ஸ்(31). கடந்த 19-ந்தேதி இரவு ஊரடங்கு விதிகளை மீறி கடைதிறந்ததாக இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சப்-ஜெயிலில் விசாரணை கைதியாக சாத்தான்குளம் போலீசார் அடைத்தனர். இந்தநிலையில் பென்னிக்சும், ஜெயராஜூம் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விசாரணை கைதியாக இருந்த அவர்களின் உயிரிழப்புக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.


latest tamil newsஇந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன.


latest tamil newsஇதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் வினாயகமூர்த்தி கூறுகையில், சாத்தான்குளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கடலூர் மாவட்டத்திலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதேபோல், தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.போராட்டம்

நெல்லை மாவட்ட கோர்ட் முன்பு, போலீசாரை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


latest tamil news
இதனிடையே முதல்வர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இரண்டு எஸ்.ஐ.,க்கள் மற்றும் தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bigu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202019:22:29 IST Report Abuse
bigu கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கருத்து என்று கூறும் கயவர்களை முதலில் உள்ளத்தள்ளி முட்டிக்கு, முட்டி தட்ட வேண்டும்
Rate this:
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202018:36:02 IST Report Abuse
Prem Kumar சாத்தான்குளம் சம்பவம் அணைவரும் கண்டிக்க வேண்டிய சம்பவமே. அரசு நிவாரண தொகை வழங்கியதுடன் சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. காவல்துறை உள்பட அனைத்து துறைகளிலும் ஒரு சிலஅதிகாரிகள் தன்னிச்சையாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொருள் மற்றும் உயிர் சேதம் ஏற்படுத்துவது என்பதும் அதனால் அரசுக்கு அவப்பெயர் எற்படுத்துவதும், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடைபெறும் என்பதை கடந்த கால சம்பவங்கள் உறுதிபடுத்தியுள்ளன. டிரைவரின் கவனகுறைவாலோ அல்லது நிலைய அதிகாரிகள் தவறாலோ ஏற்படும் ரயில் விபத்துக்கு கூட ரயில்வே துறை அமைச்சரை பதவி விலக வேண்டும் என சொல்லும் பல புத்திசாலி தலைவர்களை நாம் பார்த்தே இருக்கிறோம். எனவே, இப்போதைய சம்பவத்திற்காக முதலமைச்சரை தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதையும், வழக்கமான அறுவறுப்பான அரசியல் என்றே கருதி விமர்சனங்களை ஒதுக்கிவிட வேண்டும். கொரோனாவிற்கு எதிரான போரில் மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வரும் வேளையில் எதிர்கட்சிகள் இதையும் அரசியலாக்ககூடாது.
Rate this:
Cancel
24-ஜூன்-202018:20:12 IST Report Abuse
Ganesan Madurai அப்ப காவலர் வில்சன் கிறிஸ்துவர் இல்லையா? ஒஹோ வேற சாதி கிறிஸ்துவரா? ரொம்ப செலக்டிவ்வாக பாகுபாடு பாத்துதான் கனவுல வந்து இந்த மாதிரி ஐடியா கொடுப்பாரா? அடேய் நீங்க இப்ப திருட்டு திராவிட குடும்ப அடிமையாக செயல்படுவது தெரியுமா? மொதல்ல அது எல்லா மதத்தினருக்கும் பொதுவான வரிப்பணம். எவண்டா 2 கோடின்னு நீங்களா தீர்மானம் போடுறது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X