பொது செய்தி

இந்தியா

டீ விற்பவரின் மகள் விமானப்படை விமானி

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 டீ விற்பவரின் மகள் விமானப்படை விமானி

போபால் : மத்திய பிரதேசம், நீமுச் மாவட்டத்தில் பஸ் நிலையத்தில் டீ விற்பனை செய்து வரும் சுரேஷ் கங்க்வாலின் மகளான ஆஞ்சல் கங்க்வால் 24 சமீபத்தில் இந்திய விமானப் படையின் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐதராபாதை அடுத்துள்ள டிண்டிகல்லில் உள்ள விமானப் படைஅகாடமியில் பயிற்சி முடிந்த அவர் போர் விமானங்களை இயக்க உள்ள ஒரு சில பெண் விமானிகளில் ஒருவராக திகழ்கிறார்.

இது குறித்து அவருடையதந்தை சுரேஷ் கங்க்வால் கூறியுள்ளதாவது:கடந்த 2013ல் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது இந்திய விமானப் படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதைப் பார்த்த ஆஞ்சல் தன் விடாமுயற்சி தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பின் மூலம் போர் விமானங்களை இயக்கும் விமானியாகி உள்ளார்.அவர் நம் நாட்டுக்கு சேவையாற்ற உள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது, என்று அவர் கூறினார்.

ஆஞ்சல் கங்க்வாலுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பல தலைவர்கள்வாழ்த்து தெரிவித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202020:14:54 IST Report Abuse
babu பஸ்நிலைய டீக்கடை என்றால், கோடீஸ்வரரின் மகள். இதில் என்ன ஆச்சரியம்.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூன்-202016:19:34 IST Report Abuse
Baskar வாழ்த்துக்கள் மேடம்.
Rate this:
Cancel
Srinivasan Viswanathan - COIMBATORE,இந்தியா
24-ஜூன்-202016:08:19 IST Report Abuse
Srinivasan Viswanathan All the Best Aanjel
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X