பொது செய்தி

இந்தியா

1,340, 'வென்டிலேட்டர்'கள் மாநிலங்களுக்கு வினியோகம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

புதுடில்லி : உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, 1,340 'வென்டிலேட்டர்' சாதனங்கள், மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விபரம்:மூச்சு விட சிரமப்படும் கொரோனா நோயாளிகள் சுவாசிக்க, வென்டிலேட்டர் சாதனம் உதவுகிறது. இதை, உள்நாட்டில் தயாரிக்கவும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவவும், பிரதமரின் 'பி.எம். கேர்ஸ் பண்டு' எனப்படும் கொரோனா நிவாரண நிதியத்தில் இருந்து, 3,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.கர்நாடகா இத்தொகையில், வென்டிலேட்டர் தயாரிக்க, 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், தற்போது, 2,923 வென்டிலேட்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 1,340 வென்டிலேட்டர்கள், குஜராத், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, டில்லி, பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், 14 ஆயிரம் வென்டிலேட்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிதியில், மொத்தம், 50 ஆயிரம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 30 ஆயிரம் சாதனங்களை, பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும். தமிழகம்அக்வா ஹெல்த்கேர், 10 ஆயிரம் சாதனங்களை தயாரிக்க உள்ளது. ஏ.எம்.டி.இசட் பேசிக், ஏ.எம்.டி.இசட் ஐ என்டு மற்றும் அலைடு மெடிக்கல் ஆகியவை, முறையே, 5,650, 4,000, 350 வென்டிலேட்டர்களை தயாரிக்கும்.புலம் பெயர் தொழிலாளர்களின் நிவாரண உதவிக்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுஉள்ளது. இத்தொகை, தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், பீஹார், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X