ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை இழந்த சீனா

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
China, Australia, Trust, Falls, Poll, Sydney, சீனா, ஆஸ்திரேலியா, நம்பிக்கை, இழப்பு, கருத்துக்கணிப்பு

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இரு ஆண்டுகளுக்கு முன் உலகில் பொறுப்புடன் செயல்படுவதாக சீனாவை 52 சதவீதம் பேர் ஆதரித்த நிலையில், தற்போது 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரிப்பது மாபெரும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவின் அலட்சியத்தால் உலகம் முழுவதும் சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஆஸ்திரேலியா, சர்வதேச சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தியது. தொடர்ந்து ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டால், ஆஸ்திரேலிய - சீனா இடையேயான தூதரக ரீதியான உறவு மோசமடைந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்த சீனா, பார்லி உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தியது.


latest tamil news


மேலும் ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், கல்வி மற்றும் சுற்றுலாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியது. இந்நிலையில், சிட்னியை சேர்ந்த லோவி இன்ஸ்டியூட் நடத்திய ஆஸ்திரேலிய மக்களின் மாபெரும் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில், ஆஸ்திரேலியாவில் டிரம்ப் அந்தளவுக்கு பிரபலம் இல்லை என்ற போதிலும், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் கூட்டாக செயல்படுவதற்கு, 6 புள்ளிகள் அதிகரித்து 78 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

‛நீண்ட கால வர்த்தக கூட்டாளியான சீனா மீதான நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான நம்பிக்கையும் சரிவடைந்துள்ளது' என லோவி இன்ஸ்டியூட் இயக்குநர் மைக்கேல் ஃபுல்லோவ் தெரிவித்தார். மொத்தம் 94 சதவீதம் பேர், ஆஸ்திரேலிய அரசு தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதுடன், சீனாவுடன் வர்த்தக தொடர்புகளை குறைக்கும் வகையில் செயல்பட வேண்டுமென கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், ஆஸ்திரேலியர்களிடம், உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் மீதான நம்பிக்கையை குறைவாக உள்ளது. 50 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.


latest tamil news


ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவுடன் கூட்டு சேர்வது முக்கியமானது என கருதினாலும், ‛அமெரிக்கா மீதான நம்பிக்கை தேக்கமடைந்துள்ளது. இருந்தாலும் சில ஆஸ்திரேலியர்களுக்கு அதிபர் டிரம்ப் மீது நம்பிக்கை உள்ளது' என ஃபுல்லோவ் கூறினார். கடந்த ஆண்டை போலவே, உலகில் பொறுப்புமிக்க நாடாக அமெரிக்கா திகழுமென 51 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

2017ல் இது 61 சதவீதமாக இருந்தது.சீனாவை விட அமெரிக்காவுடன் உறவு வைத்து கொள்வது முக்கியமென 55 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை விட சீனாவுடன் உறவு வைத்து கொள்வது முக்கியமென 40 சதவீதம் பேர் கூறியுள்ளனர். நடப்பாண்டில் சீனாவை, ஆஸ்திரேலியாவின் வர்த்தக கூட்டாளியாக கருதுவதாக 55 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 82 சதவீதம் அளவுக்கு இருந்து தற்போது சரிவடைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202018:40:21 IST Report Abuse
சம்பத்  perth சீனா மீது ஆஸ்திரேலியா மட்டும் இல்லை மற்ற உலக நாடுகளும் நம்பிக்கை இழந்து விட்டனர். அவர்களின் நரி தந்திரத்தை உலக நாடுகள் உணர ஆரம்பித்து விட்டது
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
24-ஜூன்-202018:26:33 IST Report Abuse
Anand // தற்போது 23 சதவீதம் பேர் மட்டுமே ஆதரிப்பது மாபெரும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.// அப்படின்னா அங்கேயும் உண்டியல் குளுக்கீஸ், காங்கிரஸ் போன்ற கழிசடை பேர்வழிகள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஜூன்-202018:08:58 IST Report Abuse
S. Narayanan சீனாவின் அழிவு காலம் ஆரம்பித்து விட்டது. பேராசையின் எதிரொலி இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X