கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகன் மரணத்திற்கு நீதி: ஐகோர்ட் கிளை உறுதி

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவில்பட்டி, சாத்தான்குளம், ஐகோர்ட் மதுரை கிளை, தந்தை, மகன், மகன், போலீஸ், உயர்நீதிமன்ற மதுரை கிளை, Father, son, death, police custody, HC, high court, order, investigation

மதுரை : கோவில்பட்டி கிளை சிறையில், போலீசார் தாக்கியதில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழப்பிற்கு நீதி வழங்கப்படும் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் தாக்கியதில், உடல்நிலை மோசமடைந்து, இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது, தென்மண்டல ஐஜி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். போலீஸ் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதற்கு போலீசாருக்கு அரசு உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவம் போல் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்க டிஜிபி உத்தரவு பிறப்பிக்கலாம். மாஜிஸ்திரேட் விசாரணையில் எந்தவித குறுக்கீடும் இருக்கக்கூடாது. பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். தந்தை, மகன் மரணத்திற்கு உரிய நீதி வழங்கப்படும். நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம், மாவட்ட நிர்வாகம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை மற்றும் மாவட்ட எஸ்.பி., நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும். உடல்களை அடக்கம் செய்வதற்கு கொரோனா கட்டுப்பாடுகள் பொருந்தும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
27-ஜூன்-202020:00:18 IST Report Abuse
dina முதல்வர் நிவாரண நிதி கொரோன சட்டத்திற்கு மதிக்காதவர்களுக்கு வழங்கக்கூடாது .
Rate this:
Cancel
G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா
25-ஜூன்-202007:40:30 IST Report Abuse
G.MUTHIAH 1. தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தலா 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. 2. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தால் வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3. ஊரடங்கு விதிகளை மீறியதால் இவர்களால் யார்யாருக்கு கொரனா பரவியது. 4. 2 எஸ்.ஐ.க்கள், தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பிகூறுவது, மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. 5. மக்கள் வரி பணத்தில் ஊதியம் வாங்கும் காவலர்கள், மக்களைக் கொன்றாள் ஏன் கைது செய்யவில்லை. 6. காவலர்கள் எல்லாமே மனிதர்கள் தானே. இவர்கள் போடும் உடைகள் , காலனிகள், இவர்கள் குடும்பமே மக்கள் வரி பணத்தில் வாழ்கின்றனர். 7. சுதந்திர நாடா என மக்களிடையே கேள்வி எழுகிறது.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
24-ஜூன்-202019:29:11 IST Report Abuse
Raj போலீஸ் அராஜகம் ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X