மாஸ்க் அணியவில்லையெனில் அபராதம்: பிரேசில் அதிபருக்கே உத்தரவிட்ட நீதிபதி

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Brazil, Jair Bolsonaro, Wear Mask, Order, Public, face mask, brazil president, பிரேசில், அதிபர், போல்சொனாரோ, மாஸ்க், முகக்கவசம், உத்தரவு

பிரேசிலியா: பிரேசில் அதிபர் போல்சொனாரோ பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் இல்லையெனில், நாள்தோறும் 387 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் 2வது இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 11.51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 52 ஆயிரத்து 711 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு அதிபர் போல்சொனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்றால் உலகமே பேரழிவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாலும், மக்கள் சமூக விலகலை பின்பற்ற தேவையில்லை, மாஸ்க் அணிய தேவையில்லை, சுதந்திரமாக நடமாடுங்கள் என பிரச்சாரம் செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும், அவரும் வெளியே சென்றால் மாஸ்க் அணிவதில்லை.


latest tamil news


மக்களிடையே சென்று பேசும்போதும், கூட்டங்களில் பங்கேற்கும்போதும் போல்சொனாரோ மாஸ்க் அணியாமல் இருப்பதால், அவரைக் மாவட்ட நீதிபதி கடுமையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‛அதிபர் போல்சொனாரோ அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தடுக்க முடியாது. அவர் வெளியிடங்களுக்கு சென்று மக்களுடன் பேசும்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.
அவ்வாறு நடந்தால் தேசிய அளவில் குழப்பத்தை விளைவிக்கும். அதனால், தலைநகர் பிரேசிலியாவை விட்டு வெளியே செல்லும்போது அவர் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். இல்லையெனில் நாள்தோறும் 387 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.29,278) அபராதம் செலுத்த வேண்டும்,' என உத்தரவிட்டார். ஒரு நாட்டின் அதிபருக்கு மாவட்ட நீதிபதி உத்தரவிடுவது இதுவே முதல்முறையாகும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
24-ஜூன்-202019:11:51 IST Report Abuse
raja நீதித்துறை தன் கடமையை செய்வதில் பாராட்டப்படவேண்டிய செய்தி. இங்கு ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ .....
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202018:53:53 IST Report Abuse
babu என்னங்க இது, தேசத்துரோகியையெல்லாம் பணியில வச்சிருக்காங்க. கட்சிதான் தேசம்னு அவுங்க ஊர்ல யாரும் பாடம் எடுக்கலியோ?
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
24-ஜூன்-202018:44:59 IST Report Abuse
Narayanan Muthu அந்த நீதிபதியை இங்க இந்தியாவுக்கு அனுப்பி வைங்களேன். ஸலாம் பாபுகளுக்கு பாடம் எடுக்க சொல்லலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X