பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரண தொகையை பெற மா.திறனாளிகளுக்கு அறிவுரை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா தொற்றை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வரும், 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் தங்களின் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், நகலை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சமர்ப்பித்தும் நிவாரணத் தொகை, 1,000 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம். விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்- 9843032088, இளநிலை மறுவாழ்வு அலுவலர் - 9095732664, செயல் திறன் உதவியாளர் -8056506427, அலுவலக எண்- 04286 280019 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். உதவி மறுக்கப்படுவது, கிடைக்கப் பெறவில்லை எனில், 18004250111ஐ அழைக்கலாம். பேச்சுத்திறன், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, வாட்ஸ்-ஆப், வீடியோ அழைப்பு எண்- 9700799993. இவ்வாறு, நாமக்கல் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X