பொது செய்தி

தமிழ்நாடு

சாயக்கழிவு நீரால் பாதிப்பு: அமைச்சரிடம் மனு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: 'பெரியகாடு பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது' என, அமைச்சர் தங்கமணியிடம், மக்கள் மனு அளித்தனர். பள்ளிபாளையம் அடுத்த, பெரியகாடு பகுதியில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் தண்ணீர் வருவதால், விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், நேற்று, அமைச்சர் தங்கமணியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விஜயமோகன் கூறியதாவது: சாயக்கழிவுநீரால், நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து, அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். அவர், மாசு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகளிடம், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து நிலத்தடி நீரை பார்வையிட்டனர். பின்னர், பரிசோதனைக்கு இரண்டு இடத்திலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X