பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டத்தில், ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. ஆர்.டி.ஓ., கோட்டைகுமார் தலைமை வகித்து, நையாண்டி மேளம், கரகாட்ட கிராமிய கலைஞர்கள், 110 பேருக்கு, ஐந்து கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். பயனாளிகள் அனைவரும், முகக்கவசத்துடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தனர். தாசில்தார் பச்சைமுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X