பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் மெகராஜ் பிறப்பித்துள்ளார். அதன்படி, கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) லோகநாதன், நாமக்கல் கோட்ட கலால் அலுவலராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழிற் தடத்திட்ட நில எடுப்பு தனி தாசில்தார் (திருச்செங்கோடு) ரகுநாதன், கலெக்டர் அலுவலக மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கர், திருச்செங்கோடு தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். குமாரபாளையம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றி வந்த கதிரேசன், ராசிபுரம் புறவழிச்சாலை நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வந்த சிவக்குமார், குமாரபாளையம் சமூகபாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் கோட்ட கலால் அலுவலர் தமிழ்மணி, கொல்லிமலை நிலவரித்திட்ட தனிதாசில்தாராகவும், அகதிகள் மறுவாழ்வு தனிதாசில்தார் திருமுருகன், ராசிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட நில எடுப்பு தனி தாசில்தார் (நாமக்கல்) விஜயராணி, நாமக்கல் அரசு கேபிள் 'டிவி' துணை மேலாளராகவும், அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த குப்புசாமி, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட தனி தாசில்தாராகவும் (திருச்செங்கோடு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X