பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 89 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் உயிரிழந்த நிலையில், 85 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள, நான்கு பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று, ராசிபுரம் அருகே, குருசாமிபாளையத்தை சேர்ந்த, 26 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவர், அங்கேயே கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை, 90 ஆக உயர்ந்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X