அரசு பள்ளி சுற்றுச்சுவர் சேதம்; சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அரசு பள்ளியில், சேதமாகியுள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர், கடந்த சில நாட்களுக்கு முன், சிறிதளவு சேதமாகி விழுந்தது. சில பகுதிகள், ஆங்காங்கே சிதிலமடைந்துள்ளது. அதுவும் விழ வாய்ப்புள்ளது. தினமும் காலை, மாலை நேரங்களில், பள்ளிக்குள் அப்பகுதியினர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். சுற்றுச்சுவர் விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் உள்ளனர். மேலும், இரவு நேரங்களில் எளிதாக பள்ளிக்குள் புகுந்து கணினி, இதர பொருட்களை திருடிச் செல்ல வாய்ப்புள்ளது. குடிமகன்கள் பாராக பயன்படுத்துகின்றனர். எனவே, சுற்றுச் சுவரை சீரமைக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X